Tuesday, 29 September 2015

காவிரி நீர்

உன் உடலை
நான் தொட
நீ எண்ணியபோதெல்லாம்
உன் அண்டை வீட்டுக்காரன் கைகளில்
அடமானம் வைக்கப்பட்டவளாய்
நான்.....
இன்று கூட
உன்னை சூழ்ந்து நிற்போரின்

கன்னங்களையும் மார்பையும்
நனைத்தபடிதான்
உன்னை காண வந்துள்ளேன்
விழிகளின் வழியே
நீ எங்கே போனாய்?....


3 comments:

  1. எழிலோவியாவின் அற்புத வார்த்தைகளைப்
    பாராட்ட வார்த்தைகள் இல்லை
    வாழ்த்துக்கள் ஓவியா

    ReplyDelete
  2. அருமை! காவிரி நீர் இன்று வெறும் கண்ணீராய்ப் போய்விட்டது என மிகவும் கவித்துவத்தோடு கூறியிருக்கிறீர்கள்!

    பதிவர் மைதிலி கஸ்தூரிரங்கன் உங்களைப் பற்றிக் கூறினார். இந்த மாணவப் பருவத்திலேயே தமிழ் தேசியம் பேசும் அளவுக்கு உணர்வார்ந்து நிற்கும் உங்களைப் போன்றவர்களின் கைகளில்தாம் வருங்காலத் தமிழ் உலகம் சுழலவிருக்கிறது! உங்கள் விருப்பப்படியே நீங்கள் பெரிய இதழாளர் ஆக வாழ்த்துக்கள்! ஆனால், இதழாளராகக் கவிதைப் பயிற்சியை விடக் கட்டுரைப் பயிற்சியே இன்றியமையாதது. எனவே, கருத்தாழமிக்கக் கட்டுரைகள் எழுதவும் முயலுமாறு கேட்டுக் கொள்கிறேன்! நன்றி! வணக்கம்!

    ReplyDelete
  3. வணக்கம் மருமகளே
    தொடர்ந்து எழுதுக

    ReplyDelete