Tuesday, 29 September 2015

காவிரி நீர்

உன் உடலை
நான் தொட
நீ எண்ணியபோதெல்லாம்
உன் அண்டை வீட்டுக்காரன் கைகளில்
அடமானம் வைக்கப்பட்டவளாய்
நான்.....

Thursday, 24 September 2015

அழகி

செல்கின்ற இடமெல்லாம் 
தன்னைத் திரும்பிப் பார்க்க 
சுவட்டை விட்டு செல்கிறாள்
மை இட்ட அழகி

நகவெட்டி

கூர் முனைகள் ஒன்று சேர 
பிரிந்துப் போனது பிறைநிலவு
தன் வானை விட்டு....

Friday, 18 September 2015

பறை

யார் அடித்தாலும்
வாங்கிக்கொண்டு
பதிலுக்கு
சத்தத்தை மட்டுமே எழுப்பும்