Friday 18 September 2015

பறை

யார் அடித்தாலும்
வாங்கிக்கொண்டு
பதிலுக்கு
சத்தத்தை மட்டுமே எழுப்பும்  
என்னைப் போலவே
ஆகிவிட்டாயே
தமிழா!  

14 comments:

  1. பாதியைப் படித்து “ரீட் மோர்“ படித்ததும் சிரித்துவிட்டேன். பின்னர் அழுதும்விடும்படியான கவிதை.. அழகுடா.. தொடர்ந்து எழுதினால் நல்ல கவிஞராக வரும் வாய்ப்பு உள்ளது. படிப்போடு தொடரவும். (இல்லன்னா வீட்ல திட்டுவாங்கி வைத்த பழி எங்களுக்கு வருமே?)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.வீட்டில் அந்த அளவிற்கு ஒன்றும் திட்டு விழாது.

      Delete
  2. எழுப்பும் ஒலியால் எதிர்ப்படும் வழி.

    ReplyDelete
  3. ஓவியாச்செல்லம் !!! கவிதை உன்னைப்போலவே அழகுடா:)

    ReplyDelete
  4. தோள்வலி இழந்தபோதும்
    தோல் வலிவுடையதாக இருக்கிறதோ :))
    தொடருங்கள்.

    சொற்சேர்கையும் சிந்திக்கும் கோணமும் அருமையாய் இருக்கிறது.

    வாழ்த்துகள்.

    தொடர்கிறேன.

    நன்றி.

    ReplyDelete
  5. ஆகா ஆகாக மருமகளே கலக்கல்
    தொடருங்கள் ...
    ரொம்ப மகிழ்வு வாழ்த்துகள்
    இப்படி ஒரு வீச்சு எல்லோருக்கும் வாய்க்காது ...
    செமையான கவிதைகள் அனைத்துமே
    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சப்தமும் உரிமைக்குரலின் பதிவு/

    ReplyDelete
  7. பதிவுலகுக்கு ஒரு புதிய கவிதாயினி. ரசித்தேன் முன் பதிவுகளையும்

    ReplyDelete
  8. செத்தும் அடிபட்டது
    மாடு!
    பறை!

    அருமையான கவிதை எழுதி இருக்கிறாய்! வாழ்த்துக்கள் மா!

    ReplyDelete
  9. இனிய வாழ்த்துகள் எழிலோவியா. எழுத்துலகில் வளமான எதிர்காலம் அமையட்டும்.

    ReplyDelete
  10. என்ன அருமையான அற்புதமான சிந்தனைகள் ...! வாழ்த்துக்கள் மா !

    ReplyDelete
  11. ஆகா! அசத்தி விட்டீர்கள்!! கவிதைச் சூழ்க்குமம் உங்களுக்குக் கைவரத் தொடங்கியிருக்கிறது. விட்டு விடாதீர்கள்! இடையில் நிறுத்தி விட்டால் திரும்பக் கைவருவது கடினம். வாரத்துக்கு ஒன்றாவது எழுதிவிடுங்கள்!

    ReplyDelete